நாட்டில் மன்னராட்சி இல்லாதபோதும் மன்னர் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள் - நீதிபதி வராவெள
இலங்கையில் தற்போது மன்னராட்சி இல்லை. எனினும் மன்னர் ஒருவர் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், நீதிமன்றம் என்பன தனித்தனியாக இருக்க வேண்டும். அவை ஒன்றிணைந்தால், சர்வாதிகாரம் கட்டியெழுப்பபடலாம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமன் என முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ, டி. எம்.பீ.பி. வராவௌ தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விசாரணையில் நியாயம் நிலை நாட்டப்படவில்லை எனவும் பிறந்த ஆடையுடனேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் மனித உரிமை அமைப்புகளின் ஒன்றியம் பௌத்த இளைஞர் சங்கத்தில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதிகாரம் குறித்து தெளிவை பெற்று கொள்ள செல்ல வேண்டிய ஒரே இடம் உயர்நீதிமன்றமாகும். சட்டமும், நியாயமும் மக்களுக்கு அவசியம். இந்த இரண்டும் இல்லாத இடத்தில் சாத்தானே இருக்கும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலம் ஒன்று அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்று தீர்மானிப்பது உயர்நீதமன்றம்.
தற்போது நாட்டில் இது தொடர்பில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில், மன்னராட்சி இருந்த காலத்தில் சகல நடவடிக்கைகளையும் மன்னரே எடுப்பார். சகல செயற்பாடுகளும் அவரின் பொறுப்பில் இருந்தது. எனினும் தற்போது மன்னராட்சி இல்லை, எனினும் மன்னர் ஒருவர் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர் எனவும் வராவௌ தெரிவித்துள்ளார்

Post a Comment