Header Ads



பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அவசியமற்றது - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு


பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சிக்கு இலங்கை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
அதன் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவு தாமதமடைந்துள்ளது.

இதனால் இன்னும் உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் இந்த வருடத்துக்காக பல்கலைக்கழகத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் இந்த தாமதத்தை சீர்செய்துக் கொள்வதற்காகவே இவ்வாறான தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது உண்மையில் யாருக்கும் அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.