Header Ads



சர்வதேச குர்ஆன் மனன போட்டியில் வெற்றிபெற்ற மாணவனுக்கு அமைச்சர் றிசாத் வாழ்த்து



(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

சவூதி அரேபியாவில் இடம் பெற்ற சர்வதேச கிராத் போட்டியில் வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமையும்,முஸ்லிம் சமூகத்திற்கு கௌரவத்தையும் பெற்றுத் தந்த கொழும்பைச் சேர்ந்த அல்-ஹாபிஸ் முஹம்மத் றிஸ்தி முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழ்த்துக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழத்தினை தெரிவித்துள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

சுமார் 80 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சர்வதேச மட்டத்திலிருந்து புனித மக்கா நகரில் நடை பெற்ற  கிறாஅத் போட்டியில் கலந்து கொண்ட போதும்,14 வயது நிரம்பிய எமது இலங்கை மாணவன் இ்ப்போட்டியில் முதலிடத்தை பெற்றது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பதிவாகும்.

சிறுபான்மையாக இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் இஸ்லாமிய நெறிமுறைகளில் மிகவும் பற்றுதியுடன் இருப்பதாலும்,தமது நாட்டை நேசிப்பதாகவும்,இந்த மாணவனின் வெற்றி மூலம் சர்வதேச முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் பற்றி பார்வையையும் ஏற்படுத்தியுள்தை நினைவுபடுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது போன்ற சகல துறைகளிலும் முஸ்லிம்கள் முன்மாதிரி மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்றும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.