மட்டக்களப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விருது விழா (படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்த 2012 இளைஞர் விருது விழா இன்று புதன்கிழமை மட்டக்களப்பு-கல்லடி துளசி மண்டபத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி கே.கலாராணி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஸாஜில் நியூஸ் 'ஸாஜில் எப்.எம்;.இளம் அறிவிப்பாளர் எஸ்.எச்.எஸ்.புகாரி றிஸ்னாஸ் முகம்மட்டுக்கு முதலாவது இளம் அறிவிப்பாளர் விருதும்'சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இங்கு அறிவிப்பாளர் போட்டி 'தமிழ்- ஆங்கிலம் பேச்சு'நடனம்'சாஸ்திரிய சங்கீதம்'கவிதை'கட்டுரை'நாடகம்'தனி நபர் அபிநயம்'ஓவியம்'சிற்பம்' 'இளம் பாடகர் போட்டி 'புத்தாக்க நடனம் 'இஸ்லாமிய கீதம் 'பரத நாட்டியம் 'சிறுகதை'சித்திரம்'கிராமிய நடனம் போன்ற பல்வேறு கலை'கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்'யுவதிகளுக்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் 'தேசிய இளைஞர் சேவை மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் 'சிங்கள நடிகர் அர்ஜூன் கமல்நாத் 'காத்தான்குடி பிரதேச செயலாளர்' ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் 'மற்றும் அதிதிகளினால் இளைஞர் விருதும் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் 'தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் சபை உறுப்பினர் சிங்கள நடிகர் அர்ஜூன் கமல்நாத் 'தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா 'காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் 'மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ராஜன் மணில்வாகனம் 'மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 'பொது மக்கள்'பெற்றோர்கள் 'இளைஞர்கள்'யுவதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.






Post a Comment