Header Ads



பூமிக்கு சமீபமாக பயணித்த 5 கிலோ மீற்றர் அகலம் கொண்ட கிரகம் - பூமிக்கு பாதிப்பு இல்லை


5 கிலோ மீற்றர் அகலம் கொண்ட பெரிய கிரகம் ஒன்று 12 ஆம் திகதி பூமிக்குச் சமீபமாக பயணித்துள்ளது. அதன் மூலம் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாஸா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவிப்பதற்கமைய "டுட்டாடிஸ் 4179' என்ற அந்தக் கிரகம் பூமிக்கு 7 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவிலேயே பயணித்துள்ளது. 

இந்தக் கிரகம் பூமியில் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் நாஸா முன்கூட்டியே உறுதி வழங்கியிருந்தது. கிரகத்துடன் பயணித்து வந்த அதன் உடைந்துபோன சிறு துண்டங்கள் வால் நட்சத்திரங்கள் போன்று பூமியை நோக்கிக் கீழ் இறங்கியுள்ளன. அவை பிரகாசமாகக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த உடைந்த துண்டங்கள் பூமியின் வாயு மண்டலத்தினுள் சென்ற போது தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக பிரகாசமாகக் காணப்பட்டுள்ளன."டுட்டாடிஸ் 4179' கிரகம் பூமிக்குச் சமீபமாகப் பணித்துச் சென்ற விதத்தை நாஸா நிறுவனம் புகைப்படம் எடுத்துள்ளது.

அதை நேரடியாக சர்வதேச இணையத்தளம் ஊடாகப் பார்ப்பதற்கான வசதிகளையும் நாஸா நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. நாஸா நிறுவனம் தெரிவிப்பதற்குகமைய, கெனேரிதீவு வாசிகளுக்கே இந்தக் கிரகத்தைத் தெளிவாகக் காணும் அதிர்ஷ்டம் கிட்டியிருந்தது.

No comments

Powered by Blogger.