பெற்றோல் விலை 10 ரூபாவால் உயர்ந்தது
பெற்றோலிய கூட்டுத்தாபனமானது பெற்றோலின் (ஒக்டெயின் 90) விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இவ் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் 90 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும்.எல்.ஐ.ஓ.சி. நிறுவனமும் பெற்றோல் விலையை 10 ரூபாவினால் இன்றுமுதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.இவ்வதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.
Post a Comment