மலாலாவின் பெயரை பாடசாலைக்கு சூட்டுவதற்கு மாணவிகள் எதிர்ப்பு
தலிபான்களால் சுடப்பட்ட, மாணவியின் பெயரை, பள்ளிக்கு சூட்டப்படுவதை கண்டித்து, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.
பாகிஸ்தானின், பழங்குடிகள் அதிகம் வசிக்கும், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய், 14. அமைதி குறித்து, பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் மலாலா.
பள்ளி மாணவியான மலாலா, அக்டோபர் மாதம்,பேருந்தில் வீட்டுக்கு செல்ல காத்திருந்த போது, தலிபான்கள், அவளை சுட்டனர். இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாள்.பல்வேறு விருதுகள், மலாலா பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாகிஸ்தானின், ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு, பாகிஸ்தான் அரசு மலாலா பெயரை சூட்டியுள்ளது.
இதற்கு, அந்த பள்ளி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "இந்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், தலிபான்கள், இந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்துவார்கள். பாதிக்கப்படப்போவது நாங்கள் தான்' என, கூறும் இந்த மாணவிகள் வகுப்புகளை, புறக்கணித்து வருகின்றனர்.
Post a Comment