கிழக்கு மாகாண சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் வரவு செலவுத்திட்ட அறிக்கை
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
கிழக்கு மாகாண சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் வரவு செலவுத்திட்ட அறிக்கையின் குழு நிலை விவாதம் நான்காவது நாளாக வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் விவாத முடிவில் வாக்பெடுப்புக்கு விடப்பட்டபொழுது ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் வாக்களிக்கப்பட்டது. மேலதிகமாக 5 வாக்குகளினால் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.. ஆளும் தரப்பு சார்பாக மு.கா.தேசிய காங்கிரஸ் அகில இலங்கை மு.கா.தே.சு.முன்னனி மற்றும் பொ.ஐ.மு ஆதரவாக வாக்களித்திருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி எதிர்க்கட்சித் சார்பாக உரையாற்றினார் கடந்த 11ம் திகதி தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களினால் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டது.

Post a Comment