Header Ads



அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு தளபாடங்கள் கையளிப்பு (படங்கள்)


(இக்பால்)

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு - அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து  ஒரு தொகுதி தளபாடங்களை புதன்கிழமை  கையளித்தார்.

 அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இந்த தளபாடங்களை பாடசாலையின் அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கடந்த வருடமும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் அறபா வித்தியாலயத்துக்கு ஒரு தொகை தளபாடங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ள்யூ. டி. வீரசிங்க கேர்ணல் திலகரட்ண மெத்தா சமாஜ அமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேச ஆலோசகர் சட்டத்தரணி எம்.ஏ.சி. கசுறுத்தீன் அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் மௌலவி பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 



No comments

Powered by Blogger.