நாவிதன்வெளி அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவருக்கு பாராட்டு விழா (படங்கள்)
(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள கமு/சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற சாதனையாளர்களையும், அம்மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா பாடசாலையின் ஆராதண மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எல்.வதூத்தீன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன் அதியாகக் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.


Post a Comment