Header Ads



அட்டாளைச்சேனை பிரதேச அரசியல் வாதிகளின் கவனத்திற்கு..!



(இக்பால்.எம்.பிஹாம்)

கோணாவத்தை புதிய பாலத்தடி கரையோர வீதியிலிருந்து கோணாவத்தை மத்திய வீதிக்குச் செல்லும் வீதி குன்றும் குழியுமாகவுள்ளது அட்டாளைச்சேனை பிரதான வீதியிலிருந்து கோணாவத்தை புதிய பாலத்தினூடாக நேராக மத்திய வீதியை இணைக்கும் இவ்வீதியின் சிறிய பகுதியே மிக நீண்ட காலமாக சேதமடைந்துள்ளது. அட்டாளைச்சேனை 6,8 ஆம் பிரிவிலுள்ள மக்கள் தினமும் அவ்வீதியினூடாகவே பிரயாணம் செய்து தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவில் அமைந்துள்ள  அந்-நூர் மகா வித்தியாலயத்துக்கு வரும் ஆசிரியர்களும் மற்றும்  அப்பிரதேசத்தில் அமைந்துள்ளமாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர்களும், பொதுமக்களும் அவ்வீதியினூடாக பிரயாணம் செய்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.


No comments

Powered by Blogger.