Header Ads



இஸ்லாத்துல் இஸ்லாமி அனாதை பராமரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா (படங்கள்)


(இக்பால் அலி)

தர்காடவுன் இஸ்லாத்துல் இஸ்லாமி அனாதைப் பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, குவைத்  ஸகாத் ஹவுஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் 4 கோடி ரூபா செலவில்  நிர்மாணிக்கப்படவுள்ள தர்காடவுன் இஸ்லாத்துல் இஸ்லாமி அனாதைப் பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இஸ்லாத்துல் இஸ்லாமி அனாதைப் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர்  அல்ஹாஜ் எம். இஸட். எம். பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ;nஷய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.




No comments

Powered by Blogger.