Header Ads



ரப்பர் உற்பத்தி மூலம் வருவாயை அதிகரிக்க திட்டம் - அமைச்சர் றிசாத்



(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பொருட்களில் ரப்பர் காணப்படுகின்றது. இதனது முதல் தேசிய தொழில் ஆய்வு திட்டம்  இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்ததுடன்,ரப்பர் உற்பத்தி துறையின் மூலம் 2022 ஆம் ஆண்டளவில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்  நிதியினை அடைந்து கொள்ளும் இலக்கு நோக்கிய  பயணத்தின் முதற் படியாக  இந்த ஆய்வு திட்டம் அமையுமென்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் மிகவும் பிரபலமிக்க நிறுவனமான EMCl இதனை முன்னெடுக்கவுள்ளது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சும்,EMCL நிறுவனமும் அமைச்சில் வைத்து செய்து கொண்ட திட்ட ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்  போது  அவர் மேற்கண்டவாறு கூறினார்

முதல் ஆய்வில் ரப்பர் தொழில் உற்பத்தி, தொழிற்சாலைகள், ஊழியர் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் மதிப்பீடு செய்தல் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

EMCL  நிறுவனம் இதற்கு முன்னரும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுடன் கூட்டுசேர்ந்து அமைச்சின் கீழ் தொழில் மண்டலங்களை உருவாக்கல் குறித்த கணிப்பீட்டினை செய்துள்ளது.."EMCL நிறுவனம் மேலும் கல்பிட்டியில் டச் பே ரிசார்ட் அபிவிருத்தி திட்டத்தை  அரசாங்கத்துடன்சேர்ந்து செய்துள்ளதை இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவன்தி ஜயதிலக அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார். 

1993 இன்  தொடக்கத்தில் இருந்து, EMLC 500 க்கும் மேற்பட்ட திட்ட முன்மொழிவுகள், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.அதனை தாம் பாதுகாத்து வருவதாகவும், . கடந்த மூன்று ஆண்டுகளில் EML ஆலோசகர்கள் நிறுவனம்  150 திட்டங்கள் பற்றி ஆய்வு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உலகின் மிக பெரிய ஏழாவது இயற்கை ரப்பர் உற்பத்தி நாடாக இலங்கை காணப்படுவது குறிப்பிடப்படக் கூடியதொன்று என்று சுட்டிக்காட்டிய நிறுவனத்தின் தலைவர், இலங்கை ரப்பர் பொருட்கள்  ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளை கவருவதுடன், மற்றும் சர்வதேச தரத்திற்கு தமது தயாரிப்புகளை வழங்கிவருகின்றது. 2011 ல் மொத்த ரப்பர் உற்பத்தி  வருமான  அடிப்படையில்  $ 1.1 பில்லியன்களாக காணப்பட்டது, ரப்பர் மற்றும் ரப்பர் பொருட்கள் ஏற்றுமதிக்கு அப்பால், தேயிலை மற்றும் ஆடை  ஏற்றுமதி என்பன  மூன்றாவது பெரிய ஏற்றுமதி வகைக்குள் வருகிறது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10.4% ஆக ரப்பர் இருக்கின்றது.அதனது  மதிப்பு  80%  சதவீத மொத்த ரப்பர் ஏற்றுமதியில் சேர்க்கப்பட்டுள்ளது.. இலங்கையில் 125,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இரப்பர் பயிரிடப்படுவதுடன்,அதனது வருடாந்த  உற்பத்தி 153.000 தொன்னிற்கும் அதிகரித்து காணப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த உடன்படிக்கையினை அமைச்சின் மேலதிக செயலாளர் அசித செனவிரத்ன,மற்றும் EMCL நிறுவன  நிர்வாக இயக்குநர் அவன்தி ஜயதிலக ஆகியோர் செய்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.