மஹிந்தவே..! வாக்குறுதியை காப்பாற்றி தம்புள்ள பள்ளிவாசலை பாதுகாத்து தாருங்கள்..!
தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கையால் அங்குள்ள அல்லாஹ்வின் இல்லம் அகற்றப்படும் அபாயநிலை ஏற்பட்டிருக்கையில், உடனடியாக இதில் தலையிட்டு பள்ளிவாசலை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என தம்புள்ள ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தம்புள்ள உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அமைந்துள்ள பள்ளிவாசலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி மஹிந்த உறுதி மொழி வழங்கியதை இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகம் இந்த வாக்குறுதியை காப்பாற்ற செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.
65 அடி நீளமான பாதையொன்று குறித்த பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாதை பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வகையிலேயே எல்லையிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தையும் ஜனாதிபதியாகிய உங்களுக்கு நாம் அனுப்பிவைக்கிறோம். இந்த வரைபடத்தின்படி தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் அபாயமுள்ளது.
நீங்கள் கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளிவாசல்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறு கண்டு நாம் மகிழ்வடைந்தோம். ஆனால் இன்று நிலைமை மாற்றம் கண்டுள்ளது.
எனவே தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். இந்த பள்ளிவாசல் நீண்ட வரலாறு கொண்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்துவரும் முஸ்லிம்கள் இந்தப் பள்ளிவாசலை பயன்படுத்துகிறார்கள். அதனை பாதுகாக்க ந்வடிக்கை மேற்கொள்ளுங்கள். நாட்டு முஸ்லிம்கள் அனைவர் பேரிலும் இந்த கோரிக்கையை உங்களிடம் விடுக்கிறோம். நீங்கள் சாதக பதிலை பெற்றுத்தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SaatchiKaaranin kaalil viluvathai vida sandaikkaaranin
ReplyDeleteKaalil viluvathe Mel enru palli nirvaaham eduttha mudivu
Sariyaanamudivu!! MuSlim thalavarkalai nambuvathai vida ithu Mel
This is the way to move forward.he can't refuse to safeguard the Masjid. because,he care's the votes of Muslims,more than anything.
ReplyDeleteதல, காப்பாத்தும் என்று நம்புவோமாக.
ReplyDelete