மொரித்தானிய ஜனாதிபதி மொஹமட் அப்தலசிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் (வீடியோ)
மொரித்தானிய ஜனாதிபதி மொஹமட் அவுல்ட் அப்தலசிஸ் தமது இராணுவத்தினரின் தவறுதலான துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்து வமனையில் அனும திக்கப்பட்டுள்ளார். இராணுவ ரோந்துப் படை தவறுதலாக ஜனாதிபதியின் வாகன தொடரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இதனால் சிறு காயத்துக்கு உள்ளான ஜனாதிபதி தலைநகர் நவச்சொட்டில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. 55 வயதான ஜனாதிபதி அப்தலசிஸின் கையிலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அப்தலசிஸ் இராணுவ புரட்சியின் மூலம் 2008 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவராவார்.

Post a Comment