லிபியாவின் புதிய பிரதமராக அலி சிடான் தெரிவு
லிபியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் கட்சி முஸ்தபா அபுஷாகர் என்பவரை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஆனால் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவரால் அமைச்சரவையை அமைக்க இயலவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சி, ஆட்சிக்கு வந்த 25 நாட்களிலேயே அவரைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது.
இந்நிலையில், 200 உறுப்பினர்களைக் கொண்ட அக்கட்சி, அலி சிடான் என்பவரை அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமர் பதவிக்கான தேர்தலில் சிடான் 93 வாக்குகள் பெற்று, பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார். சிடான், முதலில் முஸ்தபாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் முயாமர் கடாபியின் ஆட்சியின்போது சிடான், லிபியாவின் அரசியல் தூதுவராகப் பணியாற்றி வந்தார். பின்னர் பதவியிலிருந்து விலகிய சிடான், லிபியாவைக் காப்பாற்றுவதற்காக அந்நாட்டு தேசிய முன்னணியில் இணைந்தார்.

Post a Comment