அம்பாரையில் ஊடகவியலாளர்களுக்கான மொழி உரிமைகள் பற்றிய செயலமர்வு (படங்கள்)
(எஸ்.எல். மன்சூர்)
அம்பாரை மாவட்டத்திலுள் ஊடகவியலாளர்களுக்கான மொழி உரிமைகள் பற்றியகலந்துரையாடல் ஒன்று அம்பாரையிலுள்ள மொண்டியா உல்லாச விடுதியில் அண்மையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் மாற்றுக் கொள்கைக்களுக்கான நிலையத்தின் அனுசரையுடன் அட்டாளைச்சேனையில் இயங்கும் ரூவிசன் அரச சார்பற்ற நிறுவனம் ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரபல சட்டத்தரணியும், மொழியும் மனித நேயமும் எனும் நூலாசிரியருமான எஸ். ஜீ. புஜ்சிஹேவா, சிறப்புரையாற்றினார்.
நாட்டில் சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் விடயத்தில் சரியான போக்கு காணப்படாதன் விளைவு இன்று மொழி உரிமைகளை அமுல்படுத்தப்படவேண்டியவாறு சட்டங்கள் இருந்திட்ட போதிலும் தமிழ் மொழிக்கான உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாது மனித நேயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை கண்கூடு.
இலங்கையின் அரசியல் அமைப்பின் 111வது அத்தியாயத்தின் 10,11,12,13 மற்றும் 14ஆவது உறுப்புரைகளுக்கு அமையவும் 1ஏஆம் அத்தியாயத்தின் மொழி தொடர்பான உறுப்புரை மூலமும் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் அச்சட்டம் உரியமுறையில் அமுல்படுத்தாது விடப்படுகின்றபோது அங்கே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. தனித் தமிழ் பிரதேசங்களில் சிங்களத்தில் வருகின்ற சுற்றுநிருபங்களால் திக்குமுக்காடிப் போகும் அரச ஊழியர்கள் மத்தியில் அவர்களுக்கு விளங்கும் மொழியில் அனுப்பாது விடுவது பாரிய அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் (டுடுசுஊ) மொழிக் கொள்கை பற்றிய பரிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் மொழி;க் கொள்கையை அமுல்படுத்துவதிலான குறைபாடுகுள் காரணமாக தெரிவிக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட உணர்வுகளை ஆணைக்குழு கவனத்திற் கொண்டதுடன் அது குறித்து பல தமிழ் மக்களிடமிருந்தும் அறிந்து கொண்டது என்றும், எதிர்காலச் சந்ததியினருக்கு மும்மொழித் தேர்ச்சியை வழங்குவது மிக முக்கியமாகும்.
இலங்கையை 2020ஆண்டு ஓர் மும்மொழித் தேசமாக்குவதற்கான அரசின் முன்னெடுப்பை ஆணைக்குழு வரவேற்கிறது. அதற்காக சகல அரச அலுவலகங்களிலும் தமிழ்பேசும் உத்தியோகத்தர்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டிருப்பதைக் கட்டாயமாக்குதல் வேண்டும். எந்தவொரு மாவட்டமும், மாகாணமும் மொழியடிப்படையில் வகைப்படுத்தல் கூடாது. நாட்டின் எப்பாகத்திலும் எந்தவொரு அரச உத்தியோகத்தரும் சேவையாற்றக் கூடியவாறு மொழித்தேர்ச்சியைக் கொண்டிருத்தல் வேண்டும் என்கின்ற பரிந்துரைகளை தற்போது அமுல்படுத்தினாலே மொழிமீதான குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டு நாட்டில்
சமாதானம் தலைத்தோங்கும் என்றார்.
இந்த கருத்தரங்களில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களும் வழங்கப்பட்டதுடன் பிரதேச ஊடகவியலாளர்கள் தங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை எற்படுத்தும் நோக்குடன் பத்திரிகைகளின் வியாபகத் தன்மை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டதுடன், 'கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்' பற்றி 'மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்' தமிழில் வெளியிட்ட நூலையும் அனைவருக்கும் வழங்கியது. இப்பிராந்திய ஊடகவியலாளர்களும், மொழி ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வி;ல் சிங்கள, தமிழ், முஸ்லீம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை சிறப்பான அம்சமாகும்.



Post a Comment