Header Ads



நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது துப்பாக்கி சூடு - 21 பேர் வபாத்


நைஜீரியாவில், மசூதியில் நடந்த தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின், கடுனா மாகாணத்தில், டோகான் தாவா என்ற இடத்தில், 14ம் தேதி, அடையாளம் தெரியாத நபர்கள், மசூதி மீது சரமாரியாக சுட்டனர். இதில், 21 பேர் பலியாயினர். காயமடைந்த பலர், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த படுகொலையில், மத பிரிவினைவாதிகள் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை என, ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



No comments

Powered by Blogger.