Header Ads



இலங்கையர் கட்டாரில் அடித்துக் கொலை


(AD)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹட்டாரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

புதுக்குடியிருப்பு, கிண்ணையடி வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை திருச்செல்வம் (28வயது) என்ற இளைஞனே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் கடந்த வியாழக்கிழமை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குடும்பத்தினருக்கு கட்டாரில்  இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாய்த் தர்க்கம் ஒன்றினைத் தொடர்ந்து நான்கு பேரினால் இவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவரை தாக்கியவர்களும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1 comment:

  1. இறந்தவர் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த சம்பவம் அவர்கள் இனத்தவர்களால் நடந்த படியால்
    முடி மறைத்து எழுதி இருக்கிறார்கள்.இதில் ஒரு சிங்களவரோ,முஸ்லிமோ சம்பந்தப்பட்டிருந்தால் அத்தனை
    ஊடகங்களும் இன வெறியை கக்கி இனத்தை,மதத்தை இழுத்து வசைபாடியிருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.