நீர்கொழும்பு - பலகத்துறையில் இரு சிறுவர்கள் நீரில் முழ்கி வபாத்
TM
+
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு, பலகத்துறையில் ஆற்றுமுகத்தில் குளித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த நஸ்ரத் (வயது 6) மற்றும் பேருவளையைச் சேர்ந்த ரஹமதுல்லா (வயது 9) ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் கலந்துகொள்வதற்காக பேருவளையிலிருந்து சென்ற குடும்பமொன்று இன்று முற்பகல், நீர்கொழும்பிலுள்ள தங்களது உறவினர்கள் சிலருடன் மேற்படி ஆற்றுமுகத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது மேற்படி இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் அச்சிறுவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.
சிறுவர்களின் உடல்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.பெற்றோர்களுக்கு இறைவன் மன அமைதியையும்,ஆறுதலையும்
ReplyDeleteகொடுப்பானாக.
இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete