Header Ads



இதுதான் அமெரிக்கா...!


அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ளது ஹன்ட்வில்லி. இங்கு வசித்த 10 வயது சிறுவன், கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியில் 15 வயது அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிறுவன், வீட்டுக்குள் ஒளிந்து கொண்டான். 

திடீரென வெளியில் ஓடிவந்த சிறுவன், தான் எடுத்து வந்த கைத் துப்பாக்கியால் அக்காவை பார்த்து சரமாரியாக சுட்டான். இதில் சிறுமியின் தோள், வயிறு, கால்களில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாள். வீட்டுக்குள் இருந்து அம்மா, துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்தார். அங்கு மகள் விழுந்து கிடப்பதை பார்த்தார். அதற்குள், துப்பாக்கியால் தன்னை தானே சிறுவன் சுட்டுக் கொண்டான். அதை பார்த்து அலறிய அம்மா, உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

போலீசார் விரைந்து வந்து சிறுவனையும் சிறுமியையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், போகும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டான். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

No comments

Powered by Blogger.