அட்டாளைச்சேனையில் இஸ்லாமிய மாணவர் இயக்க ஏற்பாட்டில் கருத்தரங்கு (படங்கள்)
(அட்டாளைச்சேனை ஜம்மியா)
இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் அட்டாளைச்சேனைக் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் க.பொ.த உயர்தரத்திற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் (GIT) அரச பரீட்சையை முன்னிட்டு கல்விக்கருத்தரங்கானது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் 2012.10.14ம் திகதி நடைபெற்றது.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளான அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, அல்-முனீறா பெண்கள் உயர்தர பாடசாலை, அன்-நூர் வித்தியாலயம், பாலமுனை மின்ஹாஜ் வித்தியாலயம் போன்றவற்றின் 2013 இல் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் சுமார் 125 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கை ஆசிரியர் A.R.M.Satheek(BSc) நடாத்தினார்.





Post a Comment