Header Ads



'பாம்புடன் இருப்பது அடிப்படை உரிமை' - இலங்கை உயர் நீதிமன்றத்தில் விசாரணை



கொள்பிட்டி இரவு களியாட்ட விடுதி ஒன்றில் பாம்பு ஒன்றுடன் இருந்ததாக கூறப்படும் யுவதி, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 2013 மார்ச் மாதம் 28ம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

கொள்ப்பிட்டி இரவு களியாட்ட விடுதியொன்றில் பாம்பு ஒன்றுடன் இருந்ததாக கூறப்பட்டு, குறித்த யுவதி கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக காவற்துறையும் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இது அடிப்படை உரிமை மீறல் சம்பவம் என்று கூறியே பாம்புடன் இருந்ததாக கூறப்படும் யுவதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  sfm

1 comment:

Powered by Blogger.