அதிகாரப் பரலாக்கலை வலியுறுத்திய ஹக்கீம், திவிநெகுமேக்கு எதிராக வாக்களித்தது ஏன்..?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் திவிநெகும சட்டத்திற்கு ஆதரவளித்தமை மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அதன்படி திவிநெகும சட்டத்திற்காக கிழக்கு மாகாணசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது மக்களுக்கு மு.கா செய்யும் துரோகமான செயலாகும்.
அத்துடன் அண்மையில் அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டில் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுளளார்
அந்த நிலையிலும் கிழக்கு மாகாணசபையில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இவர்களது இவ்வாறான நடவடிக்கையினால் மக்கள் மேலும் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். un

Post a Comment