Header Ads



அக்குரணை முஸ்லிம்களின் சேவையை பாராட்டுகிறார் பௌத்த தேரர் (படங்கள் இணைப்பு)



இக்பால் அலி

தொடர்ந்து நிலவும் கடும் வரட்சி காரணமாக அக்குரணைப் பிரதேசங்களில் பல கிராமங்களில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்திற் கொண்டு  ஹெல்பிங் ஹேன்ஸ் சமூக சேவை அமைப்பு கடந்த 21 நாட்களாக தொடர்ந்து இலவச குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது.

ஹெல்பிங் ஹேன்ஸ் சமூக சேவை அமைப்பின் தலைவர் அஸ்மீர் அலி தலைமையின் கீழ் கொண்ட துடிப்பான இளைஞர் அணியினர் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலத்தின் தேவை அறிந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் கிராமங்கள் என்ற வேறுபாடின்றி    சமூக நல்லிணக்கத்தைக் மையமாகக் கொண்டு சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இந்த சுத்தமான குடி நீர் விநியோகத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சுமார் 26 கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது ஒரு நாளைக்கு ஒரு பகுதிக்கு மாத்திரம் 3000 லீட்டர் வழங்கி வருகின்றனர்.

கட்டுகஸ்தோட்டையிலுள்ள  நீர் வழங்கல் அதிகார சபையிடமிருந்து நீர் தாங்கிகள் மூலம் பணத்திற்கு கொள்முதல் செய்து குறித்த பிரதேசங்களுக் கொண்டு செல்லபட்டு முறைப்படி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கிராமங்கள் தண்ணீர் முட்டி மற்றும் கேண்களுடன் பெருந்தொகையான மக்கள் தெருவெங்கும் காத்து நிற்பதைக் காணக் கூடியதாக உள்ளன. 

இந்தப் பணி குறித்து துனுவில ரஜமஹா விஹாராதிபதி உடுகங்கமுவ வஜிஞான ஹிமி கருத்துத் தெரிவிக்கையில்,

தங்கள் பிரதேசத்தில் 4000 குடும்பத்திற்கு மேற் பட்ட மக்கள் குடி நீர் தட்டுப் பாட்டினால் பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.  மிக அத்தவசியமான தேவையினை கருத்திற் கொண்டு அக்குரணைப் பிரதேசத்திலுள்ள இந்த முஸ்லிம் இளைஞர் கடந்த 21 நாட்களாக குடி நிர் விநியோகத்து வருதையிட்டு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். அரசாங்க செய்ய வேண்டிய பணியினை இவ்விளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இரவு பகல் என்று பாராமலும் அவர்களுடைய தொழில் துறவு என்று பாராமலும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குடிநீர்ப் பிரச்சினை  அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்வதற்காக 4 ம் திகதி கவனயீர்ப்பு பாத யாத்திரை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அக்குரணைப் பிரதேசத்திலுள்ள உக்கல, அலவத்துக்கொட, சாஹிராதெனிய, தலகஹகந்த, பங்கொல்லாமட, மல்கமன்தெனிய ஆகிய முஸ்லிம் கிராமப் பகுதிகளுக்கும் துனுவில, தீகல, தீகாவத்துர ஆகிய சிங்கள மக்கள் வாழும் கிராமங்களுக்கும் அலவத்துக்கொடவில் தமிழ் மக்கள் வாழும் கிராமத்திற்கும் வெளிப் பிரதேசத்திலுள்ள தொரகமுவ, கலதெனிய உட்பட இன்னும் பல கிராமங்களுக்கும் இந்த நீர் விநியோகம் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.








3 comments:

  1. இதுதான் மனித நேயம்.அல்ஹம்துலில்லாஹ் இது போல் நல்ல விடயங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  2. I proud to be a Muslim
    Allah will reward u Brothers ......

    ReplyDelete
  3. Masha Allah. Invaluable Service "ISLAM IS A LIVING RELIGION"

    ReplyDelete

Powered by Blogger.