Header Ads



'யாழ் முஸ்லிம் இணையம்' இணையங்களுக்கு முன்மாதிரியாகட்டும் - அமைச்சர் அதாவுல்லா வாழ்த்து


(யாழ் முஸ்லிம் இணைய  2வது வருட நிறைவை முன்னிட்டு தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான  ஏ.எல்.எம். அதாஉல்லா  அனுப்பிவைத்திருந்த வாழ்த்துச் செய்தி)

சமூக நலனைப் முன்னிலைப்படுத்தி பக்குவமாகவும், நடுநிலையாகவும் செய்திகளை வெளியிட்டு வரும் இணையமாக யாழ் முஸ்லிம் இணையத்தை நான் காண்கிறேன். இன்று அது தனது 2 வது வருடத்தை பூர்த்தி செய்வதை இட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்புவதில் நான் பெருமிதம் கொள்கின்றேன். (அல்ஹம்துலில்லாஹ்)

குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் குறித்த செய்திகளையும் அவர்கள் தொடர்பான அரசியல் மற்றும் ஏனைய விவகாரங்களையும்  உலகுக்கு கொண்டு செல்வதோடு உலக விடயங்களை இலங்கையர்களுக்கு அறியப்படுத்தும் உன்னத செயற்பாடுகளை நோக்கங்களாகக் கொண்டு யாழ் முஸ்லிம் இணையம் இயங்குவதனை நான் காண்கிறேன்.  அதனாலேயே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முஸ்லிம்கள் அதிகமாக பார்வையிடும் இணையத்தளமாக இது விளங்குகின்றது. 

இன்று நமது நாட்டிலும் உலக நாடுகளிலும் இணையத்தளங்கள் பல செயற்படுகின்றன. சில இணையங்கள் ஊடக தர்மத்தை முற்றாக மீறி தனிப்பட்டவர்களின் அல்லது இயக்கங்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற அடிப்படையில் செயற்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் நல்ல எண்ணங்களோடும் ஒரு வெற்றிகரமான குறிக்கோளுடனும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் யாழ் முஸ்லிம் இணையம் 

    பல்லாண்டு வாழட்டும்.... 

    தனது இலக்குகளை அடையட்டும் ......

    உலகின் இணையத்தளங்களுக்கு முன்மாதிரியாகட்டும் ......

யாழ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் உட்பட செய்தி வழங்குனர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது இதயத்து நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ)
தலைவர் - தேசிய காங்கிரஸ்  
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் 


No comments

Powered by Blogger.