Header Ads



சவூதி அரேபியாவில் இந்தோனேசியா பெண்ணுக்கு கிடைத்த வரம்


சவூதியின் தாயிஃப் நகரில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணி புரிந்து வந்த இந்தோனேசிய பணிப்பெண்ணுக்கு வாரிசுரிமையாக இரண்டு கோடி ரியால்கள் முதற் கட்டமாகக் கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரஸ்யமான செய்தி வருமாறு,,

சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தவர் ஷேக் அப்துல்ரஹ்மான் அல் தக்ஹீல். பெருமளவு சொத்துகளை வைத்திருந்த ஷேக் அப்துல்ரஹ்மான் நோய்வாய்ப்பட்டு அண்மையில் இறந்துபோனார். அவர் நோயுடன் போராடிக் கொண்டிருந்த போது, அவரை கண்ணுங்கருத்துமாக கவனித்துப் பார்த்துப் பராமரித்ததால், அந்த கவனிப்பைப் பெறும் நோக்கில்  இந்தோனேசியரான வீட்டுப் பணிப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.

இறுதியில் ஷேக் அப்துல்ரஹ்மான் உலகு நீத்த நிலையில், அவருடைய சொத்துகளை வாரிசுகளிடையே பங்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  நிலபுல வணிகம் செய்து வந்த ஷேக் அப்துல் ரஹ்மான் உடைய ஏழு சொத்துகள் முதற்கட்டமாக விற்கப்பட்டு பங்கீடு செய்யப்பட்டது. இதில் மனைவியின் உரிமைப்படி இந்தோனேசிய பணிப்பெண்ணுக்கு சுமார் இரண்டு கோடி ரியால்கள் கிடைத்தன. 

மறைந்த செல்வந்தருடைய மேலும் 20 சொத்துகள் ஹஜ் விடுமுறைக்குப் பின்னர் விற்கப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் மைய வங்கியான சாமா (சவூதி அரேபியன் மானிட்டரி ஏஜன்ஸி) தாயிஃப் நகர அலுவலகத்திற்கு, தன் பிற பங்காளிகளுடன் வருகை புரிந்த அந்த இந்தோனேஷிய யுவதி, முழுத் தொகையையும் பணமாகவே கொடுத்து விடும் படி கோரியது இதில் குறிப்பிடத்தக்கது. inneram

No comments

Powered by Blogger.