துருக்கியின் மற்றுமொரு அதிரடி
சிரியா நாட்டுக்கு சென்ற, ஆர்மீனியா நாட்டின் சரக்கு விமானம், துருக்கியில் தரையிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள், 17 மாதங்களாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஒடுக்க, அரசு படைகள், வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத், பதவி விலகும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ஆசாத் இதை ஏற்காததால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. இதனால், சிரியாவில் சண்டை தீவிரமடைந்து உள்ளது. சிரியாவுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் என்ற பெயரில், சிரியாவுக்கு செல்லும் விமானங்களில், ஆயுதங்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்கா எச்சரித்திருந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து, சிரியாவின் டமாஸ்கஸ் நகரை நோக்கி, கடந்த வாரம் சென்ற, பயணிகள் விமானம், துருக்கியின் அங்காரா விமான நிலையத்தில், வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிரியா விமானத்தில் ஆயுதங்கள் இருந்ததாக, துருக்கி அரசு தெரிவித்தது. ஆனால், இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஆர்மீனியா நாட்டிலிருந்து சிரியா நோக்கி, நேற்று புறப்பட்ட சரக்கு விமானம், துருக்கியில், எர்ஜுரம் நகரில் தரையிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் இல்லை என, தெரிந்த பிறகு, சிரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Post a Comment