குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்காதீர்கள் - பாராளுமன்ற எம்.பி. சொல்கிறார்
பெண்களுக்கு, மொபைல் போன் கொடுத்து பழக்கப்படுத்தக் கூடாது என இந்தியா பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., ராஜ்பால் சிங் சைனி கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் முசாபர் நகரில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மத்தியில், ராஜ்பால் சிங் சைனி பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது,,
நான் செல்லும் அனைத்து இடங்களிலும், பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் எல்லாம், குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்காதீர்கள் என்பதை வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, மாணவியருக்கு மொபைல் போன் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள். அது, அவர்களுக்கு தொந்தரவாகத் தான் அமையும்.என் தாயார், சகோதரி, மொபைல் போனை பயன்படுத்தியதே இல்லை. அவர்கள் வாழவில்லையா? பெண்கள் கவனத்தை திசை திருப்பும் மொபைல் போன் தேவையற்றது.என் நண்பர் ஒருவர், தன் மகள், காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்றும், அவளை கண்டுபிடித்து தரும்படியும், என் உதவியை நாடினார். அவரிடம் விசாரித்த போது, தன் மகள் ஓடிப்போவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, மொபைல் போன் தான் என்று வருத்தப்பட்டார்.இவ்வாறு ராஜ்பால் சிங் சைனி கூறினார்.
உ.பி., மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில், அசார் உட்பட சில கிராம பஞ்சாயத்துகளில், கடந்த மாதம் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், காதல் திருமணத்துக்கு தடை விதித்தும், 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கடைகளுக்கு போவதற்கும், வீட்டுக்கு வெளியே மொபைல் போன் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.இந்தத் தடை அமலுக்கு வந்துள்ள ஒரு மாதத்தில், எம்.பி., ராஜ்பாலும் இப்படி பேசி இருப்பதற்கு, உ.பி.,யில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
எதிர்ப்புக்கு, விளக்கம் அளித்துள்ள சைனி கூறியுள்ளதாவது:குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாது என பொதுவாகச் சொன்னேன். அவர்கள் படிப்பு பாதிக்கப்படும் என்ற நோக்கில் தெரிவித்தேன். இவ்வாறு, சைனி கூறியுள்ளார்.

Post a Comment