Header Ads



பிரித்தானியாவிலிருந்து 64 இலங்கையர்கள் இன்று செவ்வாய்கிழமை நாடுகடத்தப்படுகிறார்கள்


பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சிலர் நாளை நாட்டை வந்தடையவுள்ளனர். இந்தக் குழுவில் சுமார் 64 பேர் அடங்குவதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறும் வகையில் பிரித்தானியாவில் தங்கியிருந்த சிலரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விசேட விமானமொன்றின் மூலம் இந்தக் குழுவினர் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். இந்தக் குழுவினருடன் பிரித்தானியாவின் விசேட உத்தியோகத்தர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

No comments

Powered by Blogger.