நிலநடுக்கத்தை எச்சரிக்க தவறிய விஞ்ஞானிகளுக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை
இத்தாலிய நாட்டின் 5 விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரி ஒருவர் உள்பட 6 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. லாஅகியுலா பகுதியில் கடந்த 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 309 பேர் கொல்லப்பட்டனர் . இதனை முன்கூட்டியே கணித்து அலர்ட் சொல்லாத குற்றத்திற்காக பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் தலா 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு உலக அளவில் அறிவியல் நிபுணர்களை அதிர்ச்சி செய்ய வைத்திருக்கிறது.

Post a Comment