எமது சந்தத்தியினர் இன்னும் மரணித்து போகவில்லை, அவர்கள் போராடுவார்கள்
அரசியல் திருத்ததின் ஊடாக ஒருபோதும் நாட்டை பிரிக்க முடியாது என்று ஜனாதிக ஹெல உருமைய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் செயலாளர் அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
சம்பந்தன் மற்றும் அவருக்கு பின்னால் உள்ளவர்கள், அரசியல் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரிக்க முடியும் என்று எண்ணினால் அது பிழையாக எண்ணம் என்று நான் கூறுகின்றேன். சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றம் சென்று நாட்டை பிரிக்க முயற்சி செய்யும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோருக்கு ஞாபகம் செய்ய நிரும்புகிறோம், எமது சந்தத்தியினர் இன்னும் மரணித்து போகவில்லை அவர்கள் இதற்கு எதிராக போராடுவார்கள்.

Post a Comment