சம்மாந்துறையில் நடமாடும் சேவை (படங்கள் இணைப்பு)
அபு ஆதில் + ஹப்றத்
தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருள்ள) 2013 தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் முழுவது இடம்பெற்று வரும் நடனமாடும் சேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட சுமார் 71 அரச நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ள இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமை தான்கிக்கொண்டிருக்கின்றார்.
சுறு சுறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்வில் சேவைகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக பல்லாயிரக்கனக்கான மக்கள் வரிசைகளில் நின்று சேவைகளை பெற்று வருகின்றனர். இந்த நடமாடும் சேவை ஊடாக தீர்க்கப்படாதிருந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக சேவையைபெற்று வெளியே வந்த ஒருவரிடம் வினவிய போது மகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடியை சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அவர்களும் மாகாணக்கொடியை இலங்கை இராணுவத்தின் 61வது படைப்பிரிவின் இப்பிராந்திய உயர் அதிகாரி அவர்க்ளும் மாவட்டக்கொடியை உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருள்ள) 2013 தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இந்த நடமாடும் சேவையை மக்கள் சிறந்த முறையில் பிரயோசனப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொண்டதுடன் சேவை யைப்பெற இங்கு வந்துள்ள மக்களின் தேவைகளை இனம்கண்டு முடியுமான வரையும் தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.







Post a Comment