Header Ads



இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்களிடையே மோதல்



இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வதற்குக் கூடிய ரசிகர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

சுப்பர்8 சுற்று போட்டி முடிவடைந்து அரையிறுதியின் முதல் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்நிலையில் இப்போட்டிகளை பார்வையிடுவதற்கான டிக்கெட்களை கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சற்றுமுன் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு முடிந்தமையால் அங்கு குழுமியிருந்த ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.