Header Ads



ரொட்டவெள முஸ்லிம் வித்தியாலய மாணவி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு


அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயத்தில் 06ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா ஹஸ்னா பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில்  மாகாண மட்டத்தில் கூடுதலான புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்தி;ற்கு தெரிவாகியுள்ளார்.

இப்பாடசாலையில் சமூக விஞ்ஞானப்போட்டியில் தேசிய மட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள முதல் மாணவி என பாடசாலையின் அதிபர் எம்.கே.உவைஸ் தெரிவித்தார். இம்மாணவி காசீம்,சரீபா தம்பதிகளின் செல்வப்புதல்வியுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.