மட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்கள் (படங்கள் இணைப்பு)
(எப்.எம்.பர்ஹான்)
கிழக்கில் படுவான்கரையயும் -எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தில் வேலைகள் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஜப்பான் நாட்டின் தூதுவர் நொபுகிற்ரோ ஹோபோ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் 'முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் 'பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 'கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீரலி 'மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரினால் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாண்டு காலமாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட மண்முனை படுவான்கரை –மற்றும் எழுவான்கரை மக்களின் கனவு மஹிந்த சிந்தனையின் பிரதிபலிப்பினூடாக நனவாகவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரையையும் -படுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தின் வேலைகள் 'அபிவிருத்திப் பணிகள் இன்று முதல் துரிதகதியில் இடம்பெறும்
இதன் மேற்பார்வைகளை இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது
இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஜுலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இரண்டு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ள இப்பாலத்திற்கான அமைப்பு வேலைகள் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுவதாக இருந்த போதும் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக தாமதப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருக்கும் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படவுள்ள இப்பாலத்தின் மூலம் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்துக்கான மிகப் பெரியளவான போக்குவரத்துப்பிரச்சினை தீர்க்கப்படும்.
இதுவரை இவ் ஆற்றின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரப்பாதை மூலம் போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
210 மீற்றர் நீளமும் 9.8 மீற்றர் அகலமு கொண்ட மண்முனைப் பாலம் மற்றும் மேற்குப்பக்கம் 195 மீற்றர் கிழக்கு 293 மீற்றர் நீளம் கொண்ட தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கும் குறுக்காக அமைக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்கள் இணைக்கப்படும் . இதன் நீர்மாணத்திற்கான நிதி ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா ஆகும்.





Post a Comment