கல்முனை, சாய்ந்தமருது பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அநீதி..! அரசியல் வாதிகளின் சதி..!!
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் அன்மையில் பட்டதாரிப் பயிலுனர்களுக்கான தற்காலிக நியமனம் வழங்கப்பட்டு அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்காலிகமாக பதவிகள் வழங்கப்பட்டது.
கடந்த ஓரிரு நாட்களின் முன்னர் பொருளாதார அமைச்சில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்க்கான ஆட்சேர்ப்பு இடம் பெறும் போது பிரதேச செயலகங்களில் தற்காலிகமாக பனிபுரியும் பட்டதாரிப் பயிலுனர்களின் பெயர்களும் பட்டியலில் உள்வாங்கப்பட்டன.
பொருளாதார அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் தற்ப்போது கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பொருளாதார அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்டோர் அனைவருமே ஹரீ்ஸ் எம்.பீ, மற்றும் கல்முனை மேயரினால் சிபாரிசு செய்யப்பட்டோர் எனத் தெரிய வருகிறது.
இதனால் தெரிவு செய்யப்படாத பயிலுனர்கள் மிகவும் கவலையுடனும் ஆத்திரத்துடனும் கானப்படுகின்றனர். இந்த பெயர் பட்டியல் தரவரிசையிலோ அல்லது தகைமை வரிசையிலோ இடம் பெற வில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல வருடங்கள் கஸ்ட்டப்பட்டு படித்த பின்னரும் அரசியல் வாதிகளிடம் சரணகதியாக வேண்டிய துர்ப்பாக்கியத்தை எண்ணி வெட்க்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்கள் விசனம் தெரிவிக்கின்ரனர், பொருளாதார அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல் மறு பரிசீலனை செய்யப்பட்டு தகுதி அடிப்படையிலும் சீனியர் ஜுனியர் அடிப்படையிலும் பெயர்ப்பட்டியல் வெளிவராவிட்டால், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பட்டதாரிப் பயிலுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்கிழக்குப் பல்கலைக் கழக பட்டதாரிகள் சங்கம்.
கல்முனை, சாய்தமருது.

Post a Comment