Header Ads



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பு



இறைவனின் திருப்பெயரால்.
நபி வழியில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை.

இடம் : மாளிகாகந்தை வைட்பார்க் மைதானம்.
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தினத்திலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா எனும் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். (புஹாரி – 956)
பெண்களுக்கும் பிரத்தியேக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நபி வழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிட குடும்பத்துடன் அழைக்கிறது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத். 
தொடர்புகளுக்கு.
 011-2677974. 0774781471. 0774781473. 0774781475.

இறைவனின் திருப்பெயரால்.
நபி வழியில் கூட்டுக்குர்பானி.

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டுக்குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம். தனியே ஆடு வாங்கி குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த வகையில் சேர்ந்து கூட்டுக்குர்பானி கொடுத்து, குர்பானி கொடுத்த நன்மையை அடையலாம்.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு நபர்கள் வீதம் கூட்டுச்சேர்ந்தோம். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
ஆதாரம் : முஸ்லிம் - 2540.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜூப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு நபர்கள் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 நபர்கள் வீதமும் நாங்கள் கூட்டுச் சேர்ந்தோம். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)      
ஆதாரம் : திர்மிதி – 1421. நஸாயி – 4316.     

மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் 07 நபர்கள் கூட்டுச்சேரலாம். இன்னும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டுச்சேருவதற்கும் ஆதாரம் உள்ளது. ஆனால் இவ்விரண்டையும் தவிர ஆட்டை ஒரு குடும்பம் மாத்திரமே கொடுக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இம்முறையும் கூட்டுக்குர்பானிற்கு வசூல் செய்கின்றது. பங்கு சேர விரும்பும் சகோதரர்கள் ரூபாய் 10.000ஃஸ்ரீ ஜமாஅத் தலைமையகத்தில் ஒப்படைத்து விடவும். 

குறிப்பு : தனி மாடு கொடுக்க விரும்பும் சகோதரர்கள் கீழ்க்கானும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
இல – 241 ய. ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை, கொழும்பு – 10.
தொடர்புகளுக்கு : 011-2677974. 077-4781477. 077-4781476.



1 comment:

  1. ஒருவர் தனி மாடு கொடுப்பது சம்பந்தமாக ஏதும் ஹதீஸ் உள்ளதா?ஆடு கொடுக்க வேண்டும் சரி,ஏழு பேர் சேர்ந்து மாடு,ஒட்டகம் கொடுக்க ஹதீஸ் ஆதாரம் உள்ளது வசதி இருக்குது
    என்பதற்க்காக தனி மாடு கொடுக்க முடியுமா?அது நபி வழிக்கு மாற்றம் இல்லையா?தயவு செய்து ஆதாரத்தோடு விளக்கவும்....

    ReplyDelete

Powered by Blogger.