அம்பாறைக்கு செல்கிறார் மஹிந்த ராஜபக்ஸ
(எம்.ஐ.முஹம்மட் பைசல்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அன்றைய தினம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்குழுக்கூட்டத்தில் அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment