கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு (படங்கள் இணைப்பு)
அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது சம்பிராதயபூர்வமாக திருகோணமலையிலுள்ள மாகாண சபை மாகாநாட்டு மண்டபத்தில் கூடியது.சபையின் செயலாளரினால் சபையில் ஆளுனரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா கிழக்கு மாகாண சபை குழுத்தலைவர் ஏ.எம்.ஐமீல் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து பிரதித்தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிந்தார்.
இதனையடுத்து கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படுமென புதிய தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.




Post a Comment