Header Ads



வாழைச்சேனையில் முஸ்லிம், தமிழ் சிறுவர்களின் ஊர்வலம் (படங்கள்)


அனா

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் துஸ்பிரயோகத்தினை தடுக்கும் நோக்கிலும் இன நல்லரவை வளர்க்கும் நொக்கிலும் தமிழ் முஸ்லீம் பாடசாலைகள் ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலம் இன்று (01.10.2012) வாழைச்சேனையில் இடம் பெற்றது.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் புதுக்குடியிருப்பு கலைவாணி வித்தியாலய மாணவர்கள் ஒன்றாக இணைந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இவ் ஊர்வலம் சாதுலியா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வாழைச்சேனை பிரதான வீதி அஸ்ஹர் வீதி, ஹூதா பள்ளி வாயல் வீதியூடாக மீண்டும் சாதுலியா வித்தியாலயத்தை வந்தடைந்தது. இவ் ஊர்வலத்தில் இரு பாடசாலைகளின் அதிபர்களான எம்.ஏ.ஸாபீர், திருமதி கமலசாந்தி கணேஸன் உற்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.






No comments

Powered by Blogger.