அட்டானைச்சேனையில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
சம்சுதீன் அரூஸ்
+
டி.கே. ரஹ்மத்துல்லாஹ்
+
எம்.ஐ.எம்.பைசல்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகத்தித்தில் பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு உள்ளீர்ப்பதற்காக அரசியல் பாராபட்சம் காட்டப்படுவதாகக் கூறியும், தகைமை அடிப்படையில் நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையிலிருந்து நியமனம் வழங்ஙக் கோரியும் இன்று(19) காலை அட்டாளைச்சேனை பிரதேசசெயலகம் முன்பாக பட்டதாரி பயிலுனர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேசசெயலகப்பிரிவில் கடமையாற்றும் தற்காலிக நியமனங்கள் வழங்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து கருத்து தெரிவிக்கையில்- பாருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு உள்ளீர்ப்பதற்காக நேர்முகப்பரீட்சையில் தோற்றி தெரிவுசெய்யப்பட்ட போதிலும் இறுதியில் அரசியல் செல்வாக்கினால் தகைமையுடயவர்கள் நீக்கப்பட்டு புதியவர்களுக்கு நியமனம் வழங்கு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உடன் நிறுத்துமாறும், பட்;டதாரி பயிலுனர்கள் நியமன விடயத்தில் உள்ள அரசியல் தலையீட்டை உடன் நிறுத்துமாறும், நேர்முகப்பரீட்சையில் தெரிவானவர்களுக்கு உரிய நியமனத்தை வழங்குமாறும் வேண்டுகோள்விடுத்தனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் மேலும் பிரதேசசெயலங்கள் தோறும் நேர்மகப்பரீட்சை நடத்தப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு 39 பேர் தெரிவு செய்யப்பட்டு பெயர்ப்பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் அரசியல் தலையீடுகாரணமாக தெரீவுசெய்யப்பட்வர்களில் 27 பேர் நீக்கப்பட்டு நேர்முகப்பரீட்சையில் தெரிவாகத 27பேர் சேர்க்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் இடையில் புகுத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்குமேற்பட்ட ஆண்,பெண் பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டு சுலோகமேந்தி கோரிக்கைகளை கோசமிட்டு பிரதேசசெயலகமுன்பாக சென்றனர். சுலோக அட்டைகளில் அரசே பட்டதாரிகள் விடயத்தில் அரசியலை புகுத்தாதே, அரச அதிபரே ஏன் இந்த பாராபட்சம், பட்டதாரிகளின் தலைஎழுத்தை அரசியல்வாதிகளிடம் வழங்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
அடேயப்பா பட்டம் எதற்கு.......
ReplyDeleteபசைவாளி பிடித்தால் தொழில் உனக்கு...
This comment has been removed by the author.
ReplyDelete