Header Ads



''இப்படியும் ஏமாற்றுகிறார்கள்'' - இலங்கையர்களே எச்சரிக்கை..!


(எம். எஸ். பாஹிம்)

இலங்கை வர்த்தகர் ஒருவரை ஏமாற்றி 12 மில்லியன் ரூபா மோசடி செய்த மொசாம்பிய நாட்டவரொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

உள்நாட்டு வியாபாரம் ஒன்றிற்கு முதலீடு செய்வதற்கு இணங்கியே மேற்படி சந்தேகநபர் இலங்கைக்கு வந்துள்ளார். அதற்கான பணத்தை மிகவும் ரகசியமாக ஐ. நா. அமைப்பினூடாக பிரான்ஸில் இருந்து தருவித்துள்ளதாக கூறியுள்ள இவர் பச்சை நிற கடதாசி பொதியொன்றை காட்டி அதில் அமெரிக்க டொலர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இரசாயனத் திரவமொன்றின் மூலம் டொலர்களாக மாற்ற முடியும் என்று கூறியுள்ள சந்தேகநபர், இதற்காக 12 மில்லியன் ரூபா பணம் பெற்றுள்ளார்.

பணத்துடன் சந்தேகநபர் தலைமறைவான தையடுத்து இது தொடர்பில் சி. ஐ. டி. யில் முறையிடப்பட்டது. உடனடியாக செயற்பட்ட குற்றப்புலனாய் வினர் பம்பலப்பிட்டி பகுதியொன்றில் தங்கியிருந்த சந்தேநபரை கைது செய்தனர். 

இவரிடம் இருந்த 100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் 20 உம், ஒரு அமெரிக்க டொலர் நாணயத்தாள் ஒன்றும், 10 அமெரிக்க டொலர் பெறுமதியான நாணயத்தாள் ஒன்றையும், இந்திய, யூரோ மற்றும் சில நாட்டு நாணயத்தாள்களையும் மடிக்கணனி ஒன்றையும் 3 கைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய மோசடி நபர்கள், தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

3 comments:

  1. ஒரு கோடி இருபது லட்சம் ரூபாவை இழந்த அந்த ஏமாளி வர்த்தகர் யார்?

    பேராசை, பேரு நட்டம்.

    ReplyDelete
  2. இது வெளிவந்த சங்கதி வெளிவராத இப்படி ஏமாந்த சீமான்கள் ஏராளம் (மாவனல்ல,அக்குறண,பேருவல,களுத்தர,காத்தான்குடி என்று நீண்டு கொண்டே போகும்)அதிலும் எம் சகோதரர்கள் தான் அதிகம் எனக்குத்தெரிந்த ஒருவர் பத்து இலட்சத்துடன் தப்பிக்கொண்டார் அவர் மூலம்தான் ஏமாறியவர்களின் லிஸ்ட் கிடைத்தது.அடுத்து குறுக்கு வழியில் பணக்காரணாக முஸ்லிம்கள் தான் கூடுதலாக ஆசைப்படுகிறார்கள் அதனால் தான் உலகம் எங்களை நம்புவதில்லை அது மட்டுமல்ல இஸலாத்தையும் அல்லவா குறை காண்கிறார்கள்,யா அல்லாஹ் முஸ்லிம்களை இஸ்லாமிய வியாபாரிகளாக மாற்றிடுவாயாக.

    ReplyDelete
  3. சகோதரர் ahlas சொல்வது முற்றிலும் உண்மையே.

    அண்மையில், இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் முக்கிய உறுப்பினர் ஒருவர், சுமார் 8 கோடி ரூபாய் அளவில் பணத்தை மோசடி செய்துகொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    ஆரம்பத்தில், ஒரு சிலரிடம் மட்டும் பணம் பெற்று ஒழுங்காக லாபம் கொடுப்பது போன்று காட்டி, இவர் நல்ல பெயரை எடுத்துக் கொண்டார்.
    இதனால் இவரை பல் பேர் நம்பினார்கள். 'அதிக லாபம் தருகின்றேன்' என்று ஆசை காட்டி, ஒவ்வொருவரிடமும் லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்ற இவர், கோடிக்கணக்கில் கையில் பணம் சேர்ந்ததும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    இதில் கவலைக்குரிய, அதே நேரம் நிதானமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், குறித்த இயக்கத்தின் அமீர் கூட, மேற்படி மோசடிப் பேர்வழியிடம் முதலீடு செய்யும்படி ஊக்கம் கொடுத்தது ஆகும். அந்த அளவுக்கு, மேற்படி நபர் நல்லவர் போன்று நடித்துள்ளார். இதனால் பலபேர் தமது வாழ்நாள் சேமிப்புக்களை, வெளிநாட்டில் கஷ்டப் பட்டு உழைத்த பணத்தை, மனைவியின் நகைகளை என்று பலவிதமான இழப்புக்களைச் சந்தித்து உள்ளனர்.

    "குறைந்த அல்லது பூச்சிய முயற்சி, அதிக லாபம்" என்ற தூண்டிலைப் பயன்படுத்தித்தான் சக்விதி, சீகல்ஸ் போன்ற மாபெரும் நிதி மோசடிகள் நிகழ்த்தப் பட்டன என்பதனை கவனிக்க வேண்டும்.

    சிறு வயது முதல் நமக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை, அவர்களின் தற்போதைய நம்பகத் தன்மை குறித்து ஆராய்ந்து, அவர்களுடன் நாமும் இணைந்து முதலீடு செய்து வியாபாரத்தில் ஈடுபடுவது என்பதற்கும், யாரோ ஒருவருக்கு, எதோ குருட்டுத் தைரியத்தில் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு வீட்டில் உட்கார்ந்துகொண்டு கொளுத்த லாபம் வரும் என்று கண்ணை மூடிக் கொண்டிருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

    இனியும் ஏமாளிகளாகாமல்,அதே போல மற்றவர்களையும் ஏமாற்றாமல் கஷ்டப் பட்டு உழைத்து முன்னேற முயல்வதே சரியான வழியாகும்.

    நாமும் பட்டுத்தான் உணர வேண்டும் என்றில்லை, மற்றவர்களின் அனுபவங்களைக் கூட நமக்கு ஒரு நல்ல பாடமாக ஆக்கிக் கொள்ள முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.