Header Ads



திவிநெகுமே சட்டத்திற்கு எதிராக ஆசாத் சாலியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்


திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்தின, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய,  சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட்சி  தலைவர்கள் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் மூன்று வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

வட மாகாணத்தில் வாழும் மக்களின் ஆணையையும், உடன்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநருக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது என்றும், மாகாணசபைகளின் நிதி வருவாய் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பொறுப்பெடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம், மத்திய அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சருக்கு வழங்குகிறது என்றும் மனுதாரர்கள் தமது மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

பிரபல மனித உரிமை சட்டத்தரணி கிரிசாந்த வெலியாமுன்ன இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகியுள்ளார்.  

No comments

Powered by Blogger.