Header Ads



பாகிஸ்தான் பள்ளி மாணவிக்கு பிரிட்டனில் சிகிச்சை


பாகிஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் (14). அவர் பெண்கள் கல்விக்கு ஆதரவாகவும், தலிபான்களுக்கு எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்தகள் இவரை பள்ளிக்கு தேடி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அவரது தலை மற்றும் உடலில் குண்டு பாய்ந்தது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர் ராவல்பிண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது முதுகில் பாய்ந்த துப்பாக்கி குண்டை ஆபரேசன் செய்து டாக்டர்கள் அகற்றினர். இதையடுத்து அவரது நிலைமை சீரடைந்து வந்தது. எனவே அவருக்கு வெளிநாட்டில் மேல் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். 

மாணவி மலாலாவுக்கு சிகிச்சை அளிக்க ஐக்கிய அரபு நாட்டின் அரச குடும்பம் முன்வந்தது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டாள். 

முன்னதாக ஐக்கிய அரபு நாட்டின் அரச குடும்பத்தினர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் விமானம் ராவல்பிண்டி விமான நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்றப்பட்டு அவர் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டார். அவருடன் 6 டாக்டர்களும் சென்றுள்ளனர். 

1 comment:

  1. ஒரு பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத் தக்க செயல், தெளிவாகவே இஸ்லாத்திற்கு முரணானதும் கூட.

    இதனை தாலிபான்களே உண்மையில் செய்திருந்தால், தாலிபான்களின் போராட்டம் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டும் அப்பாற்பட்டது என்பது மீண்டும் ஊர்ஜிதமாகும், அவ்வாறில்லாமல், தாலிபான்களின் பெயரைப் பயன்படுத்தி அமெரிக்க உளவாளிகள் செய்திருந்தால், இது அமெரிக்காவின் வழமையான பாணி என்று அர்த்தம், அவ்வளவுதான்.

    எனினும் இதனை ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்குவதில் ஒரு பாரிய சதி இருக்கின்றது. அதில் ஒன்று, இஸ்லாம் பெண்கள் கல்வியை எவ்வகையிலும் அனுமதிப்பதில்லை என்ற கருத்தை மக்கள் மனங்களில் ஊன்றிப் பதிய வைப்பது ஆகும்.

    ஆப்கான் / பாகிஸ்தானில் இதுவரை காலத்திற்கும் பாதிக்கப் பட ஒரே ஒரு மாணவி இவர் மட்டும் தான் என்பது போல அதிகமான ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது. இவ்விவகாரத்திற்காக கூப்பாடு போடும் ஊடகங்கள், அமெரிக்க
    விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கில் கூட்டாகவும், தனியாகவும் கொல்லப் படும் அப்பாவி மாணவ மாணவிகள் குறித்து இந்த அளவு அக்கறை செலுத்துவதில்லை என்பது கவனிக்கத் தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.