Header Ads



சவூதி அரேபியாவில் இஸ்லாமிய விவகார பொலிஸாரின் அதிகாரங்கள் குறைப்பு


சவுதி அரேபியாவில், மத போலீசார், அத்து மீறி நடப்பதால், அவர்களது அதிகாரம் குறைக்கப்பட உள்ளது. சவுதி அரேபியாவில், இஸ்லாமிய நடைமுறைகள், கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பெண்கள் பர்தா அணிந்து தான் வெளியே வரவேண்டும்; கார் ஓட்டக்கூடாது; ஆண் துணையில்லாமல் இளம் பெண்கள் கடைக்கு செல்லக்கூடாது, என்பது போன்ற சட்டத்திட்டங்கள் அமலில் உள்ளன. 

இந்த நடைமுறைகளை கண்காணிப்பதற்கு, போலீஸ் துறையில் தனி பிரிவு செயல்படுகிறது. வணிக வளாகங்கள் போன்ற இடங்களில், பணியில் ஈடுபடும் இந்த போலீசார், தனியாக வரும் பெண்களை, கடைக்குள் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் ஒரு பெண், நகத்தில் சாயம் பூசி இருந்ததற்காக, வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக அவர், போலீஸ்காரருடன் நடத்திய வாக்குவாதத்தை, மொபைல் போனில் பதிவு செய்து, இணைய தளத்தில் வெளியிட்டார்.இந்த சம்பவம், சவுதி அரேபிய போலீசாரின் அத்துமீறலை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அடக்குமுறைக்கு, சவுதி பெண்கள் ஆளாவதாக வரும் தொடர் புகார் காரணமாக, மத போலீசாரின் அதிகாரங்களை குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.