Header Ads



கிழக்கு மாகாண மு.கா. உறுப்பினர்கள் தலைவரின் உத்தரவை மீறிவிட்டனர் நிசாம் காரியப்பர்


திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டபோது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் தலைமையின் உத்தரவை மீறி செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பை ஒத்தி வைக்க கோருமாறு, முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும் இதனை மீறி, மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று திவிநெகும சட்டமூலம் ஆதரித்து வாக்களித்தனர். இதனால் கிழக்கு மாகாண சபையில் இந்த சட்ட மூலம் 7 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரிஸின் பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர், மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி தலைமையின் உத்தரவை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் மாகாண சபை உறுப்பினர்களின், இந்த செயற்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படுமா? என்று அவரிடம் வினவப்பட்டது.

இந்த சட்டமூலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் நாட்டில் இல்லாத வேளையில், சமர்ப்பிக்கப்பட்டமை தமக்கு அதிர்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. சும்மா போங்க சார்.. தலைவர் இருந்த நேரம், இல்லாத நேரம்.... நீங்களெல்லாம் என்னத்த பார்த்துக்கொண்டு இருந்த இவ்வளவு நாளும், இந்த விடயம் எவ்வளவு நாளாக ( அமைச்சரவை, வர்த்தமானி, நீதி மன்றம் என்று..) பேசப்படுகிறது. இவை பற்றி உங்களது கட்சிக் காரருக்கு விளக்கம் கொடுத்தீர்களோ.. அவர்களை விடுங்கோ பணத்துக்கும் பதவிக்கும் மாரடிப்பவர்கள் என்று வைப்போம்.. இந்த சட்ட மூலம் பற்றிய நல்லது கெட்டது பற்றி பொது மக்களுக்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கலாமே... உங்களிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பாகிரார்கள்.. எனவே கொஞ்சம் உசாராக சகல விடயத்திலும் கவனம் செலுத்தி மக்களுக்கு நேரகாலத்துடன் விழிப்பூட்டுங்கள்

    சரி தலைவர் நாட்டில் இருந்திருந்தால் என்ன நடக்கும் ( வாங்குவதை வாங்கிக்கொண்டு ) ஒரு அறிக்கை விடுவார்... கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம் மக்களின் நலன் கருதி ( பாதுகாப்பு) இந்த சட்ட மூலத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதன் பிற்பாடு ஆதரவளிக்கப்பட்டது என்பார்

    சரி சரி.. ஒரே தலைவரும் செயலாளரும் தான் பேரம் பேசுவதா...!!! தேர்தலில் விட்டதை அவர்கள் எடுக்க வேண்டாமா சார்....


    ReplyDelete
  2. எல்லாம் ஒரு திட்டத்தோடுதான் அவர் வெலினாடு சென்ரார், இவர் சென்ற நாட்டில் தொலைபேசி வாசதிகள் இல்லை, அங்கிருந்து வர விமானம் இல்லையா? ஏமறுகிரம் என்பதக்காக் ... இப்படி யெல்லம் செய்யப்படாது...
    தொடந்து ஏமாறுபவனும் முட்டாள் தொடர்ந்து ஏமாதுரவனும் முட்டால்... சோ.......னாம் எல்லாரும் என்ன......?

    ReplyDelete
  3. நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மீதும் கட்சி உறுப்பினர்கள் மீதும் போலியான அபாண்டங்களைச் சுமத்தியுள்ளீர்கள். ஆனால் உங்களுக்கும் ஹெல உறுமயவுக்குமிடையில் உள்ள இரகசியத் தொடர்புகள் என்னவென்பது தெரியும். ஹெல உறுமயவுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு எதிராக உங்களால் முன்னெடுக்கப்படும் சதி முயற்சிகளை தனி ஒரு மனிதனாக நின்று நான் அம்பலப்படுத்துவேன். இவ்வளவு காலமும் மு.கா தலைமையுடன் முரண்பட்டிருந்த நீங்கள் திடீரென ரொம்ப பாசம் காட்டுவது ஏனோ? உங்களுக்கும் ஏதும் பதவி கிடைக்கப் போகிறதோ?

    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

    ReplyDelete

Powered by Blogger.