Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக அமைச்சர் டக்ளஸ் பாடுபடுகிறார் - மௌலவி சுபியான் பாராட்டு



யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்தும் உரிமைக் குரல் கொடுத்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் தெரிவித்தார். 

யாழ் ஒஸ்மானியக் கல்லூரியில்  இடம்பெற்ற மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

1990ம் ஆண்டு யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒரேயொரு தமிழ் அரசியல்வாதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும், 1994ம் ஆண்டு காலப்பகுதியில் தீவகத்திற்கு அமைச்ச்ர் அவர்கள் வருகை தந்ததன் பின்னர் முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்வதற்கு அழைப்பு விடுத்ததாக சுட்டிக்காட்டிய அவர் 2009ம் ஆண்டுக்கும் பின்னரான இக்காலப்பகுதியிலும் எமது மீள்குடியேற்றத்திலும் அதிக அக்கறைகாட்டி அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

புத்தளத்தில் சோல்ரன் 2 முகாமில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த வேளையில் அந்த முகாம் எரிந்தபோது மக்கள் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகிய நிலையில் தில்லையடிப் பகுதியில் தனது சொந்த நிதியில் காணிகளை வாங்கிய அமைச்சர் அவர்கள் அந்த மக்களை அங்கு குடியமர்த்தினார். இதனால் அந்தப் பகுதிகக்கு மக்கள் தேவாபாத் என பெயரிட்டனர். 

இதனிடையே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளம் மாவட்டத்தில்; அமைச்சர் அவர்களின் பெயரைச் சொல்லத்தக்கதாக தற்போதும் முன்பள்ளிகளை நடாத்தி வருகின்றமையும், பள்ளிவாசல்களை அமைத்துத்தந்த பெருமையும் அவரையே சாரும் என்றும் புகழாரம் சூட்டினார். 

பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த காலத்தில் நாம் தங்கியிருந்தவேளை எமது வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளையும் வழங்கி வந்த அமைச்சர் இன்றும் பல்வேறு உதவித் திட்டங்களையும் வழங்கி வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் உழைத்து வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.



1 comment:

  1. ஒட்டு மொத்த யாழ்ப்பான முஸ்லிம்களில் 2200 குடும்பங்கள் மீளக் குடியேற விண்ணப்பித்திருந்த போதும் 450 குடும்பங்களே மீளக் குடியேறியுள்ளன. இவர்களில் 300 குடும்பங்களுக்கு சொந்த காணியில்லாத பிரச்சினை நிலவுகின்றது. அவர்களுக்கு காணிகள் ஒதுக்கப் பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட வேண்டும். இர்னடவதாக இன்னும் 1750 குடும்பங்கள் மீள குடியேற விருப்பமாக உள்ளன. அவர்களுக்கு காணிகள் உள்ளன . ஆனால் அவர்களின் வீடுகள் உடைக்கப் பட்டு அழிவடைந்துள்ளன. இவை மீளக் கட்டிக் கொடுக்க பட்டால் அந்த குடும்பங்களும் மீளக் குடியேறும். உண்மையில் அமைச்சர் டக்லஸ் மனசு வைச்சால் இந்திய உதவித் திட்டத்தின் கீழும் இன்னும் உதவி வழங்கும் நிறுவனங்கள் மூலமும் வீடுகள் மீளக் கட்டும் பணியை இலகுவாக முன்னெடுக்கலாம் என்பது யாழ்ப்பான முஸ்லிம்களுக்கு தெரியும். இந்த குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க அமைச்சர் டக்லஸ் அவர்கள் பாடு பட்டால் வரும் வடமாகான சபை தேர்தலில் அவரின் ஈ பீ டீ பீ யால் நிறுத்தப் படும் உறுப்பினர் ஒருவருக்கு முஸ்லிம்கள் தமது வாக்குகளை வழங்குவார்கள்.

    இந்த வீடமைப்பு உதவியை எந்த அமைச்சர் பெற்றுக் கொடுக்கின்றாரோ அவருக்கே முஸ்லிம்களின் 5500 வாக்குகள் கிடைக்கும். இதன் மூலமாக குறிப்பிட்ட கட்சியினர் ஒரு அங்கத்தவரை மாகான சபைக்கு பெற்றுக் கொள்ள முடியும். எனவே முந்துங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.