Header Ads



இஸ்ரேலில் கிரிக்கெட் -பலஸ்தீன் சிறுவர்களையும் இணைப்பார்களாம்..!


இஸ்ரேலில் கிரிக்கட் போட்டிகளை வளர்ச்சியடைய செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜோன் எப்போரி உள்ளிட்ட குழு ஒன்று அங்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சுற்றுலாவந்த வெளிநாட்டவர்களின் கிரிக்கட் அணி ஒன்றுக்கும் இடையில் கிரிக்கட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களில் இஸ்ரேலிய சிறுவர்கள் மத்தியில் கிரிக்கட் ஊடாக சமாதானம் என்ற பெயரில் கிரிக்கட் சுற்றுப் போட்டிகளை நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பாலஸ்தீனிய சிறுவர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. sfm

2 comments:

  1. கிரிக்கட் ஊடாக சமாதானம் என்பது, இளைய பாலஸ்தீன தலைமுறையின் தலையில் மிளகாய் அரைக்கும் முயற்சியே தவிர வேறில்லை.

    ReplyDelete
  2. சமாதானத்துக்கும் சியோநிசத்துக்கும் துளி கூட சம்பந்தமில்லையே.இதெல்லாம் சும்மா ஒரு நாடகம்

    ReplyDelete

Powered by Blogger.