முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தால் அது தனது தலைமைக்கு ஆப்பபாக அமையுமென ஹக்கீம் அஞ்சினார் - அதாஉல்லாஹ்
(சுலைமான் றாபி)
அரசியல் அதிகாரம் இல்லாத ஊர்களுக்கு அதனைபெற்றுகொடுக்க வேண்டும் என்கின்ற உன்னத நோக்கிலே தற்போது தேசிய காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும் முஸ்லிம்களின் உரிமைகளை பேசி, இனவாதத்தினை கக்கி, மக்களின் வாக்குகளை சூறையாடிக்கொண்டு தற்போது வீடுகளிலும், ஹோட்டல்களிலும் முடங்கிக் கிடக்கும் அரசியல் தலைமைகளை மக்கள் கண்டுனர்த்திருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் தேசிய காங்கிரசும் அதன் தலைமையையும் "முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுத்தவர்கள்" என கூறினார்கள். ஆனால் இந்த நிலை மாறி தற்போது முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ALM அதாஉல்லாஹ் நேற்றைய தினம் (14 .10 .2012 ) ஞாயிறுக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்ற "உத்தமருக்கு உன்னத மரியாதை" வரவேட்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நமது நாட்டில் முறையான சுதந்திரமான அரசியல் தலைமைகளை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு பல கட்சிகள் முண்டியடித்துக்கொண்டு திரிகின்றன. ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. இதனாலேயே அவர்கள் வெல்வது போன்றும், உண்மை தோற்பது போன்றும் தெரிகின்றது. ஆனால் கடைசியில் உண்மை தோற்றும் வெற்றி பெறுகின்றது.
கடந்த மாகாண சபைதேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அதன் கூஜாத்தூக்கிகளும் மக்கள் மத்தியில் இனவாத உணர்ச்சி அலைகளை கிளப்பி இருந்தார்கள். இதனால் அறுபதாயிரம் வாக்கு வரை முடங்கியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் சுமார் எண்பதாயிரம் வாக்குகளை மக்களை ஏமாற்றி பெற்றிருந்தார்கள். அன்று பள்ளிக்கு இடுகின்ற காணிக்கையாக ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை அளித்து தங்கள் உணர்ச்சியினை காட்டியிருந்தார்கள் ஆனால் இன்று அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த சுமார் இருபதாயிரம் வாக்காளர்களும், கிழக்கு மாகாண ஒட்டு மொத்த சமூகமும் வென்றும் தோல்வியடைந்த நிலையிலே வாழ்கின்றார்கள். மேலும் இதில் இரண்டு விடயங்களை உள்வாங்கியிருந்தார்கள்.
1) முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர்
2 ) பள்ளி வாசல் உடைப்புக்களில் அரசாங்கத்தை எதிர்த்தல் என்பனவாகும்.
ஆனால் இவை இரண்டும் இன்று பொட்டிப்பாம்பாக மாறிவிட்டது. மேலும் தேர்தல் காலங்களில் மு.கா ஊர் துவேசத்தினால் அந்தந்த ஊர்களில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் அந்தந்த ஊர்களுக்குள்ளே பழி தீர்க்க வைத்து திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். இப்படியான விடயங்களை தேசிய காங்கிரஸ் ஒரு போதும் செய்யவில்லை. உண்மையை பேசி உண்மை சொல்கின்றவர்கள் நாங்கள் அதனால்தான் ஒவ்வொரு தேர்தலின் பின்பும் மக்கள் மத்தியில் நாங்கள் கூச்சப்படாமல் பேசுகின்றோம், ஆனால் இந்நிலை மாறி இன்று அரசின் கால்களில் மண்டியிட்டுக்கிடக்கின்றார்கள்.
தமிழ் மக்களை ஏமாற்றும் சதி எமக்கில்லை இந்த மாகாண சபைத்தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களும் ஏமாற்றபட்டிருக்கிறார்கள். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்தால் நிச்சயம் முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவி கிடைத்து விடும் அப்படி கிடைத்தால் தனது தலைமைத்துவத்திற்கு ஆப்பு விழுந்து விடும் என்றஞ்சி சுதந்திர கட்சியை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
எனவே இந்த கபட நாடகத்திற்கு மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். குர்ஆன் ஹதீஸை வைத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு அல்லாஹ்வின் ஹுக்கூம் கிடைத்தே தீரும். இன்ஷா அல்லாஹ் தேசிய காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் மக்கள் ஏற்கும் காலம் வரும் அப்போது நாம் அனைவரும் நமது சமூகத்தை விடிவுப்பயணதிற்கு இட்டுச்செல்வோம் எனக்குறிப்பிட்டார்.
இந்தக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் MS உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், MLA அமீர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

கபடத்தனமான விருப்புகளை கபளிகரம் செய்பவர்கள் இவ்வாறு தான் பேசுவார்கள்!
ReplyDeleteதவறான முறையில் விருப்பு வாக்குகளை தனது வேட்பாளருக்கு தினித்து போலித்தனம் பண்ணும் செயல் வீரர்கள் இவ்வாறு தான் பேசுவார்கள். 2008,2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அமைச்சர் என்னும் அதிகாரத்தை வைத்து மக்கள் விருப்பு வாக்களிப்பட்ட வேட்பாளரிகளின் தெரிவை குழு தோண்டி விட்டு தன்னுடைய வேட்பாளர்களை கள்ள வேட்டு போட்டு வெற்றி பெற வைக்கும் கள்ளத்தனம் உள்ளவர்கள் இவ்வாறு தான் தங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்
கல்முனைத் தொகுதியில் UPFA அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5990 ஆகும் அதன் படி விருப்பு வாக்குகளாக 17970 வாக்குகள் தான் வர வேண்டும் 5999X3 = 17970 ஆனால் இந்த மண்குதிரை வியாபாரியின் திள்ளு முள்ளின் படி மொத்த விருப்பு வாக்குகள் 20450 பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவை எந்த தேர்தல் முறையில் விருப்பு வாக்குகளாக கவனத்தில் எடுப்பதை.
குறிப்பு ஆதாரம் தேர்தல் செயலகத்தின் விருப்பு வாக்குப் பகுதிக்கான லிங்கினை உங்களுக்காக இணைத்துள்ளேன். இவ்வாறு கள்ளத்தனத்தை புரிந்து மக்களை ஏமாற்றும் இந்த அமைச்சரின் போலி சானக்கியம் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்களே புரிந்து கொள்ள முடியும்
http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Ampara%20preference.pdf
இப்படியே காட்டி,கூட்டி கொடுத்து அவரவர் பிழைப்பை கொண்டு செல்கிறார்கள்.அரசியல் என்று வந்து விட்டால் எவனுமே சுத்தமில்லை.உத்தமருக்கு உன்னத விழா என்று இருக்கிறது.யார் அந்த உத்தமர்.
ReplyDeleteதிரு Fun ணரே!
ReplyDelete"வருந்தி அழைத்தாலும் வாராத வாராபொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கிநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்துதுஞ்சுவதே மாந்தர் தொழில்"
நீங்கள் கணக்குப்பாடத்தில் 'பெய்ல்'என்பதை 2தடவைகளுக்குமேல் உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆஹா எத்தனை தடவைதான் இக்கணக்குக்காட்டுவீர்? வேலை செய்யும் இடத்திலும் இப்படி 'கணக்கு விடுவீரோ?
உங்களுக்கு 'நம்பரில்' 'கணக்குடுவதிலும்' எவனோ ஏதோ செய்திருக்கிறான் போலும். நல்ல பரிசாரி ஒருவர் பார்த்து உடனடிப் பரிகாரம் தேடிக்கோள்ளுங்கள். முற்றினால் முடியாதாகிவிடும். உங்களின் கணக்குகளை ப்பார்க்கும் போது; எங்கள் ஊரில் மனநோயோடு மரணித்த 'செக்கு மாமா'தான் நினைவுக்கு வருகிறார்.
அதாவுல்லாவின் தவறுகளை (இருந்தால்)நிச்சயமாக சுட்டிக்காட்டுங்கள் அது ஒரு ஆரோக்கியமான விடயம் மாறாக இலக்கங்களாலும் கணக்குகளாலும் உங்களுக்குண்டான வியாதியை இன்னொருவருக்கு தொற்ற வைக்க நினைப்பது எப்படி சரியாகும்? எந்த சுகதேகியாவது அதை விரும்புவானா?
கடைசியாக, அதாவுல்லா என்றால் ஏன் அப்படி ஒரு சிம்மசொப்பனம். ஏன் அப்படி ஒரு வெறுப்புணர்வு? உங்கள் எழுத்தில் உதிரம் மணக்கிறது, உண்மைகள் ஊமையாக்க ப்பட்டிருக்கின்றன, அதாவுல்லாவைக் காயப்படுத்துவதாக நினைத்து பாவம் உங்கள் மனம் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. மன இறுக்கத்தை சற்று லூஸ் பண்ணி றிலெக்ஸ் ஆகுங்கள்.
-கிழக்கான்--